Thursday, December 20, 2012

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். 

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? 

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

-நன்றி யார்ல் இணையதளம். 

Tuesday, October 2, 2012

தேசிய மொழி


தமிழ் நாடு. தமிழர்களின் தாய் நாடு, தமிழர்கள்ளுக்கு ஈடாக மற்ற மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் நாடு. வந்தாரை வாழவைக்கும் நாடு நம் தமிழ் நாடு.

எந்த நாடாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும், அதில் முன்நோடியாக இருப்பவர்களில் தமிழனும் ஒருவனாக இருப்பான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே போல் மற்ற மாநிலங்களிலும் வேலை செய்பவர்களுள் தமிழர்களே அதிகமாவர். அப்படி வேலை செய்யும் தமிழர்கள் சந்திக்கும் முக்கிய அவநிலை மொழிப்பிரச்சனையாகும்.

மொழி என்றவுடன், தமிழர்கள் ஆங்கிலம் கற்றவர்கலாயிற்றே? பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளதே, பின்பு அவர்களால் பேச முடியுமே! ஆம் அவர்களால் முடியும் ஆனால் நான் இங்கு கூறவருவது ஆங்கில மொழியை பற்றி இல்லை.

உலக மொழியான ஆங்கிலத்தை பேச, எழுத, படிக்கச் கற்றுக்கொண்டோம். அதே போல் தாய் மொழியான தமிழையும் பேச, எழுத, படிக்கச் கற்றுக்கொண்டோம். ஆனால் நம் தேசிய மொழியான ஹிந்தியை ஏன் கற்க மறந்துவிட்டோம் அல்லது நாம் கற்க மறுத்து விட்டோம் என்றும் கூறலாம். இதன் விளைவு மற்ற மாநிலங்களில் பணிபுரியும் நம் மக்கள் சந்திக்கும் அவநிலை. இந்தியாவில் ஆங்கிலத்துக்கு நிகராக அதிகமாக பேசப்படும் மொழி ஹிந்தி. மற்ற மாநிலத்தினரால் மட்டும் எப்படி ஹிந்தியில் பேச முடிகிறது என்ற கேள்வி எழலாம் அதற்கான பதில் நம் சகோதர மாநிலங்களான கேரளா, ஆந்திரா மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக வைத்திருக்கிறார்கள் தேசிய மொழியான ஹிந்தியை தமிழ் நாட்டை தவிர.

தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்பபு போராட்டம்:


1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.

மேலும் பிரபல பத்திரிக்கை நிறுவனமான தி டைம்ஸ் ஹப் இந்திய தனது ஹிந்தி பேசாத மாநிலம் என்று குறிப்பாக தமிழ் நாட்டை சொல்கிறது இந்த அவலம் நம் நாட்டிற்கு தேவை தான ?



முதலில் எதன் அடிப்படியில் ஹிந்தி நம் தேசிய மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டது யார் அதை அறிவித்தார் என்று நமக்கு தெரியுமா ? தேசிய விலங்கு ,பறவை இப்படி அனைத்தும் எதன் அடிப்படையில் வகுத்தனர். சிந்தியுங்கள் தமிழர்களே சிந்தியுங்கள்.........................

Friday, June 1, 2012

கடவுள் மறுப்புத்தத்துவம் ஒரு விளக்கம்!


நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்;
பரப்பியவன் அயோக்கியன்;
வணங்குகிறவன் காட்டுமிராண்டி -

என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்! மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

இப்போது நீ நினைத்துப்பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்! நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. "தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது.

ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள் தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்," "கருணையே வடிவானவர்," "அன்பு மயமானவர்," "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்? இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள், நகைகள், சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர். " அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.

இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர்களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும். சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 -கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. படித்த மக்களும், புலவர்கள், வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள்களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்? இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண், பெண் கடவுள்களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன். இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம்.

அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! " கோவில்கள் கள்ளர் குகை" என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள்.

" கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள், இவ்வளவு ஏன்?

நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள். உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள். எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

 "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுதப்படுகிறேன். பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு, தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்து கொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருத்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான். இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி விளக்குகிறேன். நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்டவைகளையும் வணங்குகின்றான் என்பதே.

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும், ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன். மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன். மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை, ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய், அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால், இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன். மேலும் இதற்காக ஏற்படும் பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

(தந்தை பெரியார் - "உண்மை" 14.-03-1970)

Tuesday, May 22, 2012

தமிழனுக்குக் கடவுளே இல்லை!


இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா? வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான்.

வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன்.

இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.08.1973 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

Monday, May 21, 2012

அகிம்சையை பேசியே நாசமாய் போய்விட்டோம்!


தாய்மார்களே! தோழர்களே!

அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசியவர்கள் பவுத்தர்கள், சமணர்கள். இரண்டாவது, மேல் நாட்டில் ஏசுபிரான் பேசினார். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை.

சமணர்கள் நடைமுறைகளைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சமணர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்; தலையில் பேன் பிடித்தால் பேனைக் கொல்ல வேண்டி வரும் என்பதற்காகவே மொட்டையடித்துக் கொண்டார்கள். கையில் மயில் தோகையை வைத்து முன்னால் கூட்டிக் கொண்டு நடக்கவேண்டும்; விளக்குமாற்றால் கூட்டக்கூடாது, விளக்குமாற்றால் கூட்டினால் எறும்பு, பூச்சிகள் செத்துவிடும். இப்படியெல்லாம் என்னென்னமோ செய்து அகிம்சையைப் பற்றிப் பெருத்த உபதேசம் செய்தார்கள். பலன் என்ன? அவர்களுடைய தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. இதைக் கொண்டாட இன்னும் பண்டிகை நடக்கிறது. ‘அன்பே சிவம்’; ‘சிவமே அன்பு’ என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இவர்கள்தான் ஆயிரம், பதினாயிரம் என்று சமணர்களை வெட்டிச் சாய்த்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், சமணர்கள் பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டத்தான். அகிம்சை பேசியதன் காரணமாகவே சமணர்கள் அழிக்கப்பட்டார்கள். பலன் என்ன? ஏசு, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்று சொன்னார். இன்று அதுபோல் நடந்தால், பல் போய்விடும். ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு’ என்று சொன்னார். இப்போது அப்படிச் செய்தால், என்ன ஆகும்? எல்லோரும் நிர்வாண சங்கத்தில் தான் சேரவேண்டும்.

இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள். இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும் 2, 3 இருக்கிறது என்று சொன்னால்தான், தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம், இல்லாவிட்டால் 3000 - வருடங்களாக தேவடியாள் மகன், சூத்திரன் என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இது ரொம்பக் கேடு.

உலகத்தில் வேறு எந்த ஜீவனும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச் சாப்பிடுவதில்லை. மனிதன்தான் தன் இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம். மனிதனை மனிதன் கொலை செய்வது எவ்வளவு? மனிதனை மனிதன் கொடுமைப்படுத்துவதைக் காணமுடியுமே தவிர, மாடு மாட்டைக் கடித்தது, நரி நரியைக் கொன்றது, மான் மானை அடித்தது என்று காணமுடியாது. மனிதனை மனிதன் வஞ்சிப்பது, கொடுமைப்படுத்துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது. ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்களை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசன் கையில் கத்தி இல்லாமல் இருந்தான்? முதலாவது செங்கோல் தடி; இரண்டாவது உடைவாள்; இவை இல்லாத அரசனே கிடையாது. கத்தியும் கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின.

கடவுளை எடுத்துக் கொண்டாலும், எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது? குழவிக்கல் மாதிரியான இலிங்கம் தவிர, உருவமாகக் காட்டுகிற சிவனுக்கெல்லாம், கையில் கொழு, மழு, கோடரி, அரிவாள், ஈட்டி, வேல், சூலாயுதம், அப்புறம் கொஞ்சம் பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம், அதற்குமேல் பக்குவ மேற்பட்ட பின் வில், சக்கரம் இப்படியாக உள்ளனவே. அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக் கடவுள் - அதற்குக் கத்தியும், கொழுவும், மழுவும் ஆயுதம், ஆயுதம் இல்லாவிட்டால் ஏது சைவம்? சமணர்களை வெட்டி, குத்தி, கழுவில் ஏற்றித் தீர்த்த பிறகுதானே சைவம் மிஞ்சிற்று? சமணர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தாலேயே சமணம் அழிந்தது. சைவம் ஆயுதத்தினாலேயே மிஞ்சிற்று. ‘சைவம்’, ‘அன்பு’ என்பதெல்லாம் தாசியின் காதல் போன்றதே.

--திருச்சியில் 1956-ல் தந்தை பெரியாரின் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.1956)

Tuesday, May 8, 2012

மதம் என்ற ஒன்று தேவைதானா ?

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம் பார்க்கும்போது 'மதம் என்ற ஒன்று தேவைதானா ?' என்ற கேள்வி எழுகிறது.

விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று நாசகார ஆயுதங்கள் வருகின்றன! வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன! உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம் வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல, விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.

கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்! 
அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப் பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் அது!

இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம் பற்றி அவசியம் சொல்ல வேண்டும். வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில் இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்
மகாத்மா காலிலே விழுந்து, 'நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்
நான் நரகத்துக்குதான் போவேன்!' என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான் மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும் பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான், தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.

இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்
இருக்கிறது, என்றார் காந்திஜி இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்தபாவத்துக்கு பரிகாரம் என்றார்.

இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.
ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்
திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான். 

எந்த மதமானாலும் அவை 'அயலானுக்கும் அன்பு காட்டு' என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் 'எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!' இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.

--சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.

Wednesday, April 25, 2012

உட்கார்ந்திருந்தால் 3 ஆண்டில் உயிருக்கு ஆபத்து

சிட்னி : நீண்ட காலம் வாழ ஆசையா... இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று மிரட்டுகிறது ஒரு ஆய்வு முடிவு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள் :

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான். ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில் , இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.
இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

* 45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2006,10 வரை 5 ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
* ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரைவிட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம்.
* பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது ஆபத்தானது.

- நன்றி தினகரன் நாளிதழ் 

Thursday, April 12, 2012

கே எப் சி யில் நடக்கும் கொடூரம்


   கே எப் சி.KFC (Kentucky Fried Chicken) நாம் எல்லோராலும் நன்கு அறியப்படும் ஒரு பொழுதுபோக்கு உண்டிச்சாலை ஆகும். கசாப்பு கடைகளில் கோழி கறிகளை வாங்கி வீட்டில் சமைத்து உண்டோம் ஒரு காலத்தில், ஆனால் இப்போது சிக்கன் என்றாலே கே எப் சி என்றாகிவிட்டது. மேலும் அங்கு சுவையும் அருமையாக இருக்கிறதாம்.

   நாம் அந்த சுவையான சிக்கனை சுவைத்து உண்கிறோம், ஆனால் அந்த சுவையான சிக்கனை கே எப் சி எப்படி தயரிக்கிராகள் என்று யாருக்கும் தெரியாது. கசாப்பு கடைகளில் கூட கோழிகளை ஒரு வித மனிதாபிமானத்தோடு நடந்துக்கொள்வார்கள் ஆனால் கே எப் சி அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா என்று கேட்ப்பார்கள் போல.

   எண்ணிக்கையின்றி சிறு சிறு கோழி குஞ்சிகளின் அலகுகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து விடுகிறார்கள் காரணம் அப்போதுதான் அவைகள் அதிகாமாக தீனிகளை உண்ணும்.

   பிறகு அக்கோழி குஞ்சிகளை எல்லாம் ஒரே இடத்தில் அடைகிறார்கள், அங்கு அவைகளால் சுற்றித்திரிய கூட முடியாது. மேலும் குஞ்சிகள் கொலு கொலுவென்று வலர எதோ ஒரு தீவனத்தை அவைகளுக்கு கொடுக்கிறார்கள். அத்தீவனத்தை உண்டு வளரும் குஞ்சிகள் தங்கள் இயல்பான இடையை விட அதிகமான இடையை கொண்ட கொலு கொலு கோழியாக வளருகின்றன. அந்த கொலு கொலு கோழிகள் தங்கள் அதிக இடை காரணத்தால் நடக்க கூட முடியாமல் கஷ்டப்படுகின்றன.

   முழுமையான வளர்ச்சி அடைந்த கோழிகளை தொழிற்சாலைக்குள் அவைகளை சுவையான சிக்கெனாக மாற்றுகிறார்கள். இங்கு இயந்திரத்தின் மூலம் ரோமத்தை பிரிக்கிறார்கள் கோழிகள் உயிருடன் இருக்கும் நிலையில்.  பிறகு சுழற்றும் மெல்லிய தகுடுகளின் மூலம் வரிசைகளில் வரும் கோழிகளை இரக்கமின்றி கொள்கிறார்கள். இத்தனை கொடுமைகலுக்கு பின்னரே அவற்றை சுவையான சிக்கன்களாக நமக்கு பறிமாறுகிறார்கள்.

   என் நண்பர்கள் மூலம் கே எப் சி யில் சிக்கன் சுவையாக இருக்குமென்று அறிந்து அதை உண்ண வேண்டும் என்ற  ஆசை இருந்தது ஆனால் கீழே இருக்கும் காட்சிகளை கண்ட பிறகு அந்த ஆசையானது அடியோடு அழிந்து விட்டது.






இன்னும் இது போன்ற பல காட்சிகள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன.

Wednesday, April 11, 2012

ஆய கலைகள் அறுபத்து நான்கு

   'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்து நான்கு கலைஞானம்' என்பது பழந்தமிழ் இலக்கியப் பாகுபாடாகும். பின்னாளில் இவை பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கி வருகின்றன.

உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர்.

   'அறுபத்து நான்கு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்து நான்கு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.

   அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22.ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

Tuesday, April 3, 2012

பயணம்


   
   நாம் பயணம் செய்ய முடிவு செய்தால் போய் சேரும் இலக்கை முடிவு செய்த பிறகே பயணத்தை மேற்கொள்வோம். இலக்கை முடிவு செய்தால் மட்டும் போதாது பயணம் செய்ய இருக்கும் பாதையையும் அறிய வேண்டும். அப்படி பாதை தெரிய வில்லை என்றாலும் எவரிடமாவது வழி கேட்டாவது இலக்கை சென்று அடைந்திடுவோம்.

   நம் வாழ்க்கையும் ஒரு பயணம் தான், அதில் பயணிக்கும் நாம் பயணிகள். பயணிகளாகிய நம்மில் பலருக்கு  போய் சேரும் இலக்கை அறியாமல் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இலக்கே அறியாதவர்கள் எந்த பாதையில் பயணிப்பார்கள் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். சிலர் இலக்கை அறிந்தும் பாதை தெரியாமல் தவிக்கிறார்கள். இன்னும் சிலர் இலக்கை விரைவில் சென்றடைய சில குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கிறார்கள். இவர்களில் இலக்கை சென்று அடைபவர்கள் மிக சொற்பம்.

   மரணம் என்பது நம் இலக்கு கிடையாது. நாம் மரணத்தை நோக்கி பயணிக்கவில்லை. நாம் நம் லட்சியமாகிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். முதலில் இலக்கை தேர்ந்தெடுங்கள், பிறகு அந்த இலக்கை சென்றடையும் பாதையை தேர்வு செய்யுங்கள் பாதை நேரான நேர்மையான பாதையாக இருக்கட்டும்.பின்னர் அப்பாதையில் பயணிங்கள் லட்சியத்தை கண்டிப்பாக சென்றடைவீர்கள். அப்படி நீங்கள் செல்லும் பாதை இலக்கை சென்றடைய வில்லை என்றால் வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுங்கள் ஆனால் தவறான பாதையை தேர்வு செய்யாதிர்கள்.

   இலக்கை அடையும் பாதை தொலைவாக இருந்தால், கரடு முரடாக இருந்தாலும், இடையில் எந்த இடையூறு வந்தாலும் மனம் தளராதிர்கள், மேற்கொண்டு பயணத்தை தொடருங்கள்.எல்லோராலும் இலக்கை எளிமையாக சென்றடைய முடியாது, சிலருக்கு உதவி தேவைப்படும், அவர்களை ஒருவர் வழி நடத்த வேண்டும். வழி நடத்துவராக, வழி காட்டியாக, உதவுபவராக நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்றவர்கள் உள்ளனர் ஆனால் அதே போல் நம் பாதையை மாற்றி தவறான பாதையில் திருப்பிவிடுபவர்களும், இலக்கை அடைய விடாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் தாண்டி லட்சியத்தை அடைபவன் தான் லட்சியவாதி. நாம் இலட்சியவாதிய ? பதில் உங்கள் மனதில்.

   லட்சியம், பாதை இவற்றை முடிவு செய்யுங்கள் பயணத்தை தொடருங்கள் வெற்றி உங்கள் பக்கம். நாம் அன்றாட செய்யும் பயணத்தை வாழ்க்கைக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். லட்சியத்தை நோக்கி பயணம் தொடரட்டும், பயணிப்பவர்களுக்கு வெற்றி அடைய என் வாழ்த்துக்கள். பயனிக்காதவர்கள் முடிவெடுங்கள் இது உங்கள் வாழ்க்கை...  

Friday, March 16, 2012

தமிழ் எண்கள்


    ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு அதே போல் நம் தாய் தமிழ் மொழிக்கும் பல சிறப்புகள் உண்டு. நாம் 1 2 3 4 5 6 7 8 9 0, ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது, இவற்றை சிறு வயது முதல் பயின்று பயன் படுத்தி வருகின்றோம், ஆனால் நம் புழக்கத்தில் கொண்டிருக்கும் எண் வடிவமானது நம் தமிழ் மொழிக்குரியதா ? என்றால் நமக்கு அதற்க்கான பதில் தெரியாது. முதலில் நம் மொழியில் எண்ணிற்க்கு வடிவம் இருகின்றதா என்றே நமக்கு  தெரியாது.  ஆனால் தமிழில் எண்களுக்கு வடிவம் உண்டு இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இனி தெரிந்துக்கொல்வோம் .



 


 ஒவ்வொரு மொழியும் தனக்கென தனி எண் வடிவங்களை கொண்டுள்ளது அவற்றை ஆராய்ந்தால் அதனை பற்றிய விவரங்கள் தெரியவரும். மேலே உள்ளவை தமிழ் எண்களின் வடிவமாகும். ஆனால் நாம் இன்று இவ்வடிவத்தை பயன் படுத்துவது இல்லை.
 


    தமிழில் பூஜியத்தை பயன் படுத்தவில்லை. 150 = நூற்றி ஐம்பது என்று கூறுவோமே தவிர ஒன்று பூஜ்யம் ஐந்து என்று கூற மாட்டோம். ஆகையால் தானோ தமிழில் பூஜியத்திற்க்கு முக்கியத்தும் கொடுக்கவில்லையோ என்ற விவரம் இன்றும் நமக்கு புலப்படவில்லை. ஆனால் பூஜியத்திற்க்கான வடிவத்தை தமிழ் ஆண்டு குறிப்பேடுகளில் உபயோக படுத்தி உள்ளனர்.


தமிழ் இலக்கண படிவத்திலும் பூஜியத்தை உபயோக படுத்தி உள்ளனர்.
 
 
  நாம் தமிழில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று வாக்கியமாக கூறிவருகிறோம் ஆனால் அவற்றிற்கும் தனி சிறப்பு பெயர்கள் உண்டு அவற்றை கீழே காணுங்கள்.


   நாம் இப்போ கண்ட என் வடிவமும் வளர்ச்சியின் மாறுதலால் மாற்றம் அடைந்துள்ளது.கல்வெட்டுகளில் போதிக்கப்பட்ட எண்களுக்கான வடிவமும் வளர்ச்சியில் மாற்றம் கண்டுள்ளது.
 


கீழ் வருவன தமிழ் எண்களுக்கான தமிழ் வடிவமாகும்.

 

  எண்களுக்கும் தமிழிலும் வடிவம் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும். தமிழ் மொழிக்கான பல அறிய சிறப்புகள் புதைந்து உள்ளன அவற்றை தோண்டி எடுத்தால் நம் மொழியின் பெருமையை இவ்வுலகம் அறியும். நாம் இவ்வடிவத்தை இன்று பயன் படுத்தாமல் இருப்பதற்க்கு இவை நம்  மொழியினத்தாரை தவிர மற்றவரால் உணர முடியாது என்பது ஆகும், மேலும் நாம் இன்று கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி போன்ற எல்லா துறையிலும்  உலகளவில் தலை நிமிர்ந்து நிற்க்கின்றோம் இந்நிலையில் இவ்வடிவத்தை நாம் பயன் படுத்துவது சரியாக இருக்காது. அதற்காக நாம் அவற்றை மறந்து விட கூடாது. நம் தமிழ் மொழியில் எண்ணிற்க்கு வடிவம் இருப்பது போல் மற்ற மொழிகளிலும் வடிவம் உண்டு.


   

Monday, March 12, 2012

உங்களை, உங்களுக்கே உணர்த்தும்

'நாற்பது வயதில் நீங்கள் இருபதாகலாம்... அறுபது வயதில் நாற்பதாகலாம்!'

  வாழ்வியல் பயிலரங்கங்களை நடத்த அவ்வப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் புதுப் புது அனுபவங்கள் கிடைக்கும்.

  சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில்... ஏராளமான அனுபவ அறிவு தேவைப்படும் பதவிகளில் எல்லாம் வெறும் இருபது, இருபத்தி இரண்டு வயது பெண்கள் வீற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். 'எப்படி...?!' என்று நான் வியந்தபோதுதான், என் மாணவன் ஒருவன் எனக்கு அந்த நாடுகளில் நிலவும் நிதர்சனத்தை விளக்கினான்.

  "சுவாமி... இவர்கள் எல்லாம் பார்க்கத்தான் இருபது, இருபத்தி ஐந்து வயது பெண்கள் போல இருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அதைவிட இருமடங்கு வயது கொண்டவர்கள்!" என்றான். நம்புவதற்கு நான் சிரமப்படுவதைப் பார்த்த மாணவனே தொடர்ந்தான்.

  "சுவாமி... இந்தியாவில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களுக்குச் செல்லும் பெண்கள் நல்ல நகை நட்டோடு, பாந்தமாக பட்டுப்புடவை அணிந்து போவதை எப்படி முக்கியமாக நினைக்கிறார்களோ, அதேபோல அலுவலகத்துக்கு நல்ல கச்சிதமான உடலமைப்போடு போக வேண்டும் என்பதை இந்த நாட்டுப் பெண்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். குழந்தை பெற்று சற்றே சதை போட்டுவிடும் பெண்கள்கூட பேறுகாலம் முடிந்து மீண்டும் அலுவலகம் போக முடிவெடுத்தால், சுமார் இரண்டு மாத காலம் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடம்பை கச்சிதமாக மாற்றிக் கொண்டுதான் அலுவலகம் செல்கிறார்கள்" என்றான்.

  நான் என் இந்த அனுபவத்தை என் இந்திய மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு, " 'உடற்பயிற்சியால் நாற்பது வயது பெண்கள் எல்லாம் இருபது வயது பெண்கள் போல தோற்றமளிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இவர்களின் உற்சாகம், துறுதுறுப்பு, வேலையில் குதூகலம் என்று... அனைத்திலும் இருபது வயது பெண்கள் போல சுறுசுறுப்போடு எப்படி நடந்து கொள்ள முடிகிறது?!'

  - இதுதானே உங்களின் கேள்வி? இது மிகவும் சுலபம். நினைத்தால்... மனதளவில் உங்களால்கூட உங்கள் வயதை பாதியாகக் குறைத்துக் கொண்டு உற்சாகத்தை இரண்டு மடங்கு கூட்ட முடியும்" என்றேன்.

  ஒரு பெண்மணி, "சுவாமி... நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எல்லாமே தலைகீழாக இருக்கிறதே?! திருமணமான புதிதில் என் கணவரின் கவனம் முழுக்க முழுக்க என் மீது இருந்தது. எனக்கு அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. பேறுகாலத்திலும் குழந்தைகள் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த பருவங்களிலும் என் கவனம் முழுக்க அவர்கள் மீது இருந்தது. அப்போதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால், இப்போதோ குழந்தைகள் பெரியவர்களாகி வேலை கிடைத்து திருமணம் நடந்து வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது வாழ்க்கையில் வெறுமை தான் மிஞ்சியிருக்கிறது."

  இப்படிப் பேசிய பெண்மணிக்கு நாற்பத்தி ஐந்து வயதுதான் இருக்கும். அதற்குள் அவருக்கு வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்டதைப் போல ஓர் உணர்வு.

  ஆனால், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் ஒருபோதும் இப்படி நினைப்பதில்லை. அவ்வளவு ஏன்... மறைந்த நமது பிரதமர் இந்திரா காந்தியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பேரன், பேத்தியெல்லாம் எடுத்தவர்தான். அந்த அந்தஸ்தை அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தார். பேரன், பேத்திகளோடு எல்லாம் விளையாடினார். ஆனால், வேலை என்று வரும்போது அவர் தன்னை பாட்டியாக கற்பனை செய்து கொண்டதுகூட இல்லை. ஆம்... உலகம் எப்போதுமே அவரை ஒரு இரும்பு மனுஷியாகத்தான் பார்த்திருக்கிறதே ஒழிய, ஒருபோதும் பாட்டியாகப் பார்த்ததே இல்லை. காரணம்... வயது என்பது உடம்பைவிட மிக அதிகமாக மனதோடும், செயல்பாட்டோடும் சம்பந்தப்பட்டது.

  அமெரிக்கா போன்ற பிரதேசங்களில் வாழும் 'வல்ச்சர்' என்று சொல்லப்படும் பருந்துகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். டிஸ்கவரி சேனலே இப்போது தமிழில் வருவதால் அதில்கூட நான் சொல்லும் செய்தியை நீங்கள் பார்க்கக்கூடும். அந்த பருந்துகளுக்குப் பொதுவாக நாற்பது வயது வரைதான் ஆயுள். அந்த வயதை எட்டிப்பிடிக்கும் போதே எலி, பாம்பு மாதிரியான இரைகளை வேட்டையாடிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதன் அலகுகள் மழமழவென்று மழுங்கி போய்விடும். கால் விரல்களில் இருக்கும் நகங்களும் கூர்மையை இழந்துவிடும். அதனால் இந்தப் பருவத்தில் ஒரு சில பருந்துகள் உணவின்றி இறந்துபோய்விடும். ஆனால், அவற்றில் அதீத மனத்தின்மை வாய்ந்த பருந்துகளோ... தங்களின் முயற்சியால் கூடுதலாக முப்பது வருட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும்!

  ஆச்சர்யமாக இருக்கிறதா..? ஆனால், அது உண்மைதான்! இந்தப் பருந்துகள், நாற்பது வயதான பருவத்தில் ஆளரவமற்ற ஏகாந்தமான மலைப்பிரதேசங்களுக்குச் சென்று பெரும் மறுமலர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும். இந்தக் காலத்தில் அவை மலைகளில் தன் அலகுகளை மோதி உடைத்துக் கொள்வதுடன், புதிதாக அலகு முளைக்கும் வரை அந்த மலைகளிலேயே தங்கியிருக்கும். அதேபோல கூர்மை இழந்த தங்களது கால் நகங்களை அவை பிடுங்கிப் போட்டுவிட்டு, புதிய நகங்கள் வளரும் வரை காத்திருக்கும். புதிய அலகும் கால் நகங்களும் வளர்ந்த பின்னர், மீண்டும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி... மேலும் முப்பது ஆண்டு காலம் வாழும்!

  இந்தப் பருந்துகளைப் போல நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். உங்கள் இளமைப் பருவத்தில் நீங்கள் ஆசைப்பட்டு நிறைவேறாத விஷயங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். நீங்கள் படிக்க விரும்பிய புத்தகங்களை எல்லாம் அனுபவித்து படித்து ரசியுங்கள். 'வீணை கற்றுக் கொள்ள வேண்டும்', 'இந்தி கற்றுக் கொள்ள வேண்டும்' 'தெலுங்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்!' என்று ஆளாளுக்கு ஆயிரமாயிரம் நிறைவேறாத ஆசைகள் மனசுக்குள் அடங்கிக் கிடக்கும். உங்களின் வயது என்னவானாலும் அதை இப்போது நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

  'குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதித்து விளையாடுகிற மாதிரி...' என்று யாராவது உங்களைப் பரிகாசம் செய்ய முற்பட்டால்... அதையெல்லாம் காதிலேயே வாங்காதீர்கள். எனக்குத் தெரிந்த பல பெண்மணிகள் நாற்பத்தைந்து வயதுக்கு மேல்தான் ஸ்கூட்டி ஓட்டவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் பேரன், பேத்திகளோடு பேச அறுபது வயதுக்கு மேல் கம்ப்யூட்டரை இயக்க கற்றுக் கொண்ட பலரை உங்களுக்கே தெரிந்திருக்கும். புதிய விஷயத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் போது... உங்கள் மனதுக்குள் உற்சாக அலை அடிப்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும்!

பின் நாற்பதிலும் நீங்கள் இருபது; அறுபதிலும் நாற்பது!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.

Thursday, March 1, 2012

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்


   எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும்.

   தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.
பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

   அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப் பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப் பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.
ஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

   அடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப் பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

   இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

   கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

   என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி, சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

   தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த புத்திமதி!

   நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

   ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு... என்று வரிசையாகச் சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும் சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

   குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான் பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.
அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

   சரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில் நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன் குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

   ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.
ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

  ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக, எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.
ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல... நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.

Wednesday, February 29, 2012

காதல் விதை

விடியலில் விதைத்தேன் விதையை

துயிலெழுந்து பார்த்தேன் துளிர்விட்டிருந்தது

மாலையில் பார்த்தேன் மரமாயிருந்தது

அசந்த நேரம் அடித்தது ஜாதிப்புயல்

வீழ்ந்தது வேருடன் காதல் மரம்.
 

Monday, February 27, 2012

வாழ்கை

   என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜா வேட்டையாட காட்டுக்கு செல்லும்போது அவருடன் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா திறமையானவர். அவர் கொடிய காட்டு மிருகங்களையும் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

தாத்தாவிடம்  என் கேள்வி.

   தாத்தா... கும்மிருட்டாக இருக்கும்போது காட்டிற்குள் வேட்டையாட போகிறீர்களே, உங்களுக்கு பயமாக இருக்காதா ? என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

தாத்தாவின் பதில்.

   அடே பையா!... வேட்டைக்கு போவதே அந்த பயம் கலந்த கிளர்ச்சியான உணர்வுக்காகதானே. என்று சொல்லி சிரித்தார்.

   ஆமாம்... வேட்டையாட காட்டுக்கு செல்வது அவருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது ஒரு பயங்கரமான பிரதேசம் எந்த திசையிலிருந்து எந்த மிருகம் நம் மீது பாயுமோ? என்று கூட தெரியாது. காட்டுக்குள் வேட்டையாட செல்வது ஒரு திகிலான விஷயம் தான். என்றாலும் ஏன் வேட்டையாட போகிறீர்கள்?

   எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதும் ஓர் அலாதியான இன்பம் உண்டு. மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ அல்லது ஒரு சிங்கத்தையோ பிடித்து வர சொல்லி அதை மரத்தில் கட்டி வைத்து அம்பு எய்து கொள்ளமுடியும். ஆனால் அதில் என்ன சந்தோஷம், திகிலுணர்வு இருக்கிறது. "அய்யோ!... என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்றுவான் என்று கனவிலும் நினைத்தது இல்லையே!", "செழிப்பாக ஓடும் என்று நினைத்து தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாக படுத்துவிட்டதே!", "என் உயிர் காதலி என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாலே!" என்று வருத்தப்பட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

   வேட்டைக்கு செல்லும்போது, "இந்த புலி நான் ஏமார்ந்தபோது என் மீது பாய்ந்துவிட்டது, இது நீதி இல்லை" என்று சொல்லி நாம் புலம்பியதுண்டா?

   வாழ்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள், போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகம் பிறக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்.

-சுவாமி சுகபோதானந்தா  


Tuesday, February 21, 2012

கோலங்கள்


 
   நம் மக்கள் ஒரு காரியத்தை காரணம் இல்லாமல் செய்யமாட்டார்கள், எனினும் நாம் ஒரு செயலை செய்தால், அதை நாம் யோசிப்பது இல்லை, ஏன் செய்கிறோம்?, எதற்காக செய்கிறோம்?, என்று சிந்தித்தால் அதற்கான விடை வெளிப்படும். நாம் அன்றாட செய்யும் பல விசயங்களிலேயே பல அறிய காரணங்கள் அடங்கி உள்ளன, ஆனால் நாம் அதை தெரிந்துக்கொள்ள முயல்வது இல்லை. இதனால் நம் நாகரிகம் பல மாறுதல்களை கண்டுள்ளது.

    நாம் கோலத்தை பார்த்திருப்போம், பெண்கள் அதை போட்டும் இருப்பார்கள் ஆனால் கோலம் போடுவதன் காரணத்தை யாரும் அறிந்திலர். இப்போது கோலம் போடுவதன் காரணத்தை அறிவோம்.

  விடியற்காலையில் சூரியன் விளிப்பதற்கு முன்னதாகவே நம் வீட்டு பெண்கள் விழித்து வாசலை சுத்தப்படுத்தி மாட்டு சாணத்தை தெளித்து கோலம் போடுவார்கள், மாலையிலும் கோலம் போடுவார்கள்  இது நம் பண்பாட்டிற்குரியது இன்றும் நாம் பின்பற்றி வருகின்றோம். பூக்கள் இருக்க இணைத்து கட்டுவது போல, தெருக்களில் வீடுகள் இணைத்து  கட்டப்பட்டு இருக்கும். அவ்வீடுகளின் வாசலில் போடப்பட்டு இருக்கும் கோலம் நடக்க வழி இல்லாமல் தெருவையே மறைத்து, பார்பதற்கு ஒரு அழகான காட்சியை நமக்கு அளிக்கும்.

ஆனால் அந்த கோலத்தை ஏன் போடுகிறோம்?, எதற்காக போடுகிறோம் என்று நமக்கு தெரிந்திருக்க இயலாது. இனி அதை தெரிந்துக்கொள்வோம்.

    பெண்கள் போடும் கோலங்கள் பார்த்து ரசிக்க கூடிய கோடுகள் அல்ல, ஒவ்வொரு கோலத்திற்கும் பல அறிய அர்த்தங்கள் மறைந்து இருக்கின்றன. பெண்கள் பொதுவாக புள்ளி வைக்காமல் கோலத்தை போட விரும்புவது இல்லை, கோலம் என்பது கோடுகளால் போடும் ஒரு வரைபடம் தானே, கற்பனைக்கு தகுந்தவாறு சுதந்திரமாக சித்திரங்களை தீட்டலாமே  எதற்கு புள்ளிகள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்த புள்ளிகள் சுதந்திரத்தை தடை செய்யும் முற்று புள்ளிகள் அல்ல, நாம் நம் வாழ்க்கை எப்படி வேண்டுமென்றாலும்  வாழலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், சந்தோசம் மட்டும் தான் முக்கியமென்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அது வாழ்க்கை அல்ல, அது மிருக வாழ்க்கையாகும். வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறை ஒழுக்கம் என்பது வேண்டும் அப்போதுதான் அது வாழ்க்கையாக இருக்கும்.

  ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்னையிக்கிறதோ அதே போலத்தான் புள்ளிகளும் கோலத்தை அர்த்தமுடையதாக வைத்திருக்கின்றன. புள்ளிகள் கோலத்தின் கோடுகளை தாறுமாறாக வளரவிடாது நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி ஒரு உருவம் தருகின்றன. புள்ளிகளை மீறிய கோடுகள் அலங்கோலங்கலாகும். புள்ளிகள் என்பது ஒழுக்கத்தின் மறுவடிவம் நம் மக்கள் எதை சொல்ல வந்தாலும் ஒழுக்கத்தை மையப்படுத்தி சொல்வார்களே தவிர அதற்கு மாறாக எதையும் சொல்ல மாட்டார்கள், காரணம் இந்த பிரபஞ்சமானது ஒரு வித ஒழுக்கத்தில் தான் அதாவது ஒரு கட்டுபாட்டில் தான் கால காலமாக நெறி தவறாமல் இயங்கி வருகிறது. வானத்தில் இருக்கின்ற எதோ ஒரு கிரகம் தனக்கென்று உள்ள நெறியை அதாவது சுற்று பாதையை விட்டு தாறுமாறாக இயங்குகிறது என்று வைத்து கொள்வோம் அது மற்ற கிரகத்தின் மீது மோதி அந்த கிரகத்தை அழிப்பதோடு மட்டுமல்ல தன்னையும் அழித்து கொள்ளும் எனவே ஒழுக்கம் மற்றும் நெறி என்பது இயற்கை வகுத்த விதி அந்த விதியை மீறுகின்ற போது அழிவு தான் நேரிடும் என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்.

  எனவே தான் நெறிப்பட்ட வாழ்க்கையை வலியுறுத்தி சொல்ல வந்த  தங்களது புறசெயலில் கூட ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறைகளை வலியுறுத்தினார்கள் நம் மக்கள் அதன் அடையாளம்  தான் புள்ளிகளுக்குள் கட்டுப்பட்ட கோலம் என்பது. இன்று வீடுகளின் முன்னால் கோலங்களை பார்ப்பது அரிதாகி விட்டது அதனால் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பதும் அரிதாகி சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது.

    கோலத்தில் வைக்கின்ற புள்ளிகளுக்கே இத்தனை காரணம் என்றால், கோலம் போட பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை காரணங்கள் மறைந்திருக்க கூடும். அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிரதாய பழக்கம் மட்டுமல்ல சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானமாக கருதப்பட்டு வருகின்றது.  உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான் அதனால் மாக்கோலத்தை வலியுறுத்தி, மண்ணால்  கோலத்தை போடுகின்றனர்.
 
 அரிசியை தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்கு கூட காரணம்  இருக்கிறது. பால், பழம், மாமிசம் போன்ற உணவுகளை உண்டு வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது அதனால் தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணை தொடுகின்ற பெண் நானும் ஒரு நாள் இப்படி தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்கு பேராசை என்பது எப்படி வரும்? என்ற கருத்து சொல்லப்படுகின்றது.


   வண்ணங்களை தவிர்த்து மாவாலும் மண்ணாலும் கோலங்களை போடுவோம். வண்ணக்கோலம் மட்டுமே அழகானவை என்பது இல்லை. மாவாலும், மண்ணாலும் போடப்படும் கோலங்கள் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன.