Tuesday, October 2, 2012

தேசிய மொழி


தமிழ் நாடு. தமிழர்களின் தாய் நாடு, தமிழர்கள்ளுக்கு ஈடாக மற்ற மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் நாடு. வந்தாரை வாழவைக்கும் நாடு நம் தமிழ் நாடு.

எந்த நாடாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும், அதில் முன்நோடியாக இருப்பவர்களில் தமிழனும் ஒருவனாக இருப்பான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே போல் மற்ற மாநிலங்களிலும் வேலை செய்பவர்களுள் தமிழர்களே அதிகமாவர். அப்படி வேலை செய்யும் தமிழர்கள் சந்திக்கும் முக்கிய அவநிலை மொழிப்பிரச்சனையாகும்.

மொழி என்றவுடன், தமிழர்கள் ஆங்கிலம் கற்றவர்கலாயிற்றே? பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளதே, பின்பு அவர்களால் பேச முடியுமே! ஆம் அவர்களால் முடியும் ஆனால் நான் இங்கு கூறவருவது ஆங்கில மொழியை பற்றி இல்லை.

உலக மொழியான ஆங்கிலத்தை பேச, எழுத, படிக்கச் கற்றுக்கொண்டோம். அதே போல் தாய் மொழியான தமிழையும் பேச, எழுத, படிக்கச் கற்றுக்கொண்டோம். ஆனால் நம் தேசிய மொழியான ஹிந்தியை ஏன் கற்க மறந்துவிட்டோம் அல்லது நாம் கற்க மறுத்து விட்டோம் என்றும் கூறலாம். இதன் விளைவு மற்ற மாநிலங்களில் பணிபுரியும் நம் மக்கள் சந்திக்கும் அவநிலை. இந்தியாவில் ஆங்கிலத்துக்கு நிகராக அதிகமாக பேசப்படும் மொழி ஹிந்தி. மற்ற மாநிலத்தினரால் மட்டும் எப்படி ஹிந்தியில் பேச முடிகிறது என்ற கேள்வி எழலாம் அதற்கான பதில் நம் சகோதர மாநிலங்களான கேரளா, ஆந்திரா மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக வைத்திருக்கிறார்கள் தேசிய மொழியான ஹிந்தியை தமிழ் நாட்டை தவிர.

தமிழ் நாட்டில் ஹிந்தி எதிர்பபு போராட்டம்:


1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.

மேலும் பிரபல பத்திரிக்கை நிறுவனமான தி டைம்ஸ் ஹப் இந்திய தனது ஹிந்தி பேசாத மாநிலம் என்று குறிப்பாக தமிழ் நாட்டை சொல்கிறது இந்த அவலம் நம் நாட்டிற்கு தேவை தான ?



முதலில் எதன் அடிப்படியில் ஹிந்தி நம் தேசிய மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டது யார் அதை அறிவித்தார் என்று நமக்கு தெரியுமா ? தேசிய விலங்கு ,பறவை இப்படி அனைத்தும் எதன் அடிப்படையில் வகுத்தனர். சிந்தியுங்கள் தமிழர்களே சிந்தியுங்கள்.........................

2 comments:

  1. ஆங்கிலமோ, ஹிந்தியோ, எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா....? என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா...? சந்தேகம் தான்... சரி, அது இருக்கட்டும்...

    எந்த மொழியானால் என்ன..? ஐந்து மொழி கற்றுக் கொண்டால், அவர் ஐந்து பேருக்கு சமம்... உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம்-யாருடைய துணையுமின்றி....!

    பதிவின் முடிவில் கேட்டீங்களே ஒரு கேள்வி... அனைவரும் சிந்திக்க வேண்டும்...

    ReplyDelete
  2. ஐந்து மொழியை கற்றுக்கொண்டாள் ஐந்து மொழியினதவருக்கு சமம் என்றீர்கள் ஆனால் அந்த ஐந்து மொழியானது நம் மொழியை சிதைக்காமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete