Monday, January 30, 2012

அலைபேசி


பல பேர்களில் என்னை  கவர்ந்தவள்
கண்டேன் அவளை கண்களால்
ரசித்தேன் அவளை இதயத்தால்
அடைந்தேன் அவளை மனதால்


பகல்தோறும் இரவுதோறும் நாள்தோறும்
பேசினேன்.

கொடுத்தேன் தினம் நூறு 
முத்தங்கள்.

கொடுத்தேன் தினமும் அவளுக்கு
உயிர்.

விடிந்ததும் தேடினேன் அவளை
என் கட்டிலில்.

பிரிந்தது இல்லை அவளை
ஒரு நிமிடம் கூட.

அவளுக்காக செலவு செய்தேன்
அளவில்லாமல்.


ஒரு நாள்

உபயோகமற்று போனாள் என் காதலிப்போல்
அன்றுதான் உணர்ந்தேன் அவள் பெண்ணென்று
காரணம் என்னிடம் பணம் இல்லாதது
புரிந்து கொண்டேன் காதலியின் மறுருபம்
அலைபேசி என்று............

Wednesday, January 25, 2012

மனிதனின் உருவாக்கம்

                கல்லிற்ககு உருவம் கொடுத்தான் சிற்பி, அந்த உருவத்திற்க்கு உயிர் கொடுத்து தெய்வம் என்று பெயரிட்டு இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி வணங்கி வருகின்றோம் நாம். கடவுள், தெய்வம், சாமி இன்னும் எத்தனை பெயர்களோ ?  இருக்கின்றதோ, இல்லையோ என்று தெரியாமல் அதை பற்றி அறியாமல் பித்து பிடித்த நாம் வழிப்பட்டு வந்துக்கொண்டிருகின்றோம்.

               இவ்வுலகை படைத்தவன் கடவுள், அவ்வுலகில் மனிதர்களாகிய நம்மை படைத்தவனும் அவனே என்று கூறிச்சென்ற முன்னோர்களின் வாக்கை 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் நம்பி பின்பற்றி வருகிறோம். ஆனால் நம்முள் எவரேனும் அந்த கடவுளை படைத்தவன் யார்? அவன் எப்படி யாருக்கு பிறந்தான், தோன்றினான் என்ற கேள்வியை கேட்டது உண்ட இல்லை ஏனென்றால் நாம் தான் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கின்றோமே.  அதிலிருந்து நீந்தி கரைக்கு வந்தவர்கள் தான் நார்தீகர்களாகிய தந்தை பெரியார் போன்றவர்கள். ஆனால் நாம் இன்னும் அதிலேயே தத்தளித்துக்கொண்டிருகின்றோம், சிலர் அழிந்தும் போய் இருக்கிறார்கள்.

                 நாம் ஏன் யோசிப்பது இல்லை, கடவுளும் நம்மை போன்ற உருவம் தானே, அவனுக்கும் உண்ண உணவு, உறங்க இடம் எல்லாம் தேவை படுமல்லவா. அப்படியானால் அவனுக்கு உணவு எங்கிருந்து கிடைக்கின்றது, மேலோகத்தில் நம் விவசாயிகள் வானத்தில் ஏர் உழுது பயிர் வைத்து நாற்று நட்டு அவனுக்கு உரியதை விளைய வைத்து கொடுக்கின்றார்களா, இது சாத்தியமானத மேலோகத்தில் விளை நிலங்கள் தான் இருக்கின்றதா இல்லை எதுவும் இல்லை.  பூமியில் பயிர் வைத்தவனே வெயில் மழையை  வேண்டிருக்கிறான் மேலோகத்தில் சொல்லவா வேண்டும். அப்படி அவன் உறங்க வேண்டுமானால் ஒரு அரண்மனை இல்லை ஒரு வீடாவது வேண்டுமல்லவா. அவற்றை கட்ட பொருட்களை எங்கிருந்து பெறுவான் அல்லது கட்டிட கலை வல்லுனர்கள் தான் இருகிறார்களா இல்லை. கடவுள் என்றதால் பொருட்களையும் வல்லுனர்களையும் பூமியிலிருந்து இறக்குமதி செய்வானா? அவன் தான் கடவுள் ஆயிற்றே எதுவும் செய்ய சாத்தியம் தானே. இவை எல்லாம் நம்பக்கூடியவை தானா? ஆனால் நாம் நம்பிக்கொண்டு தான் இருக்கின்றோம் அவனுக்கு சக்தி இருக்கு என்று ஆனால் எதுவும் உண்மை இல்லை எல்லாம் பித்தலாட்டத்தனம். நம்மிடையே  கற்பனைத்திறன் மிகவும் அதிகமாக உள்ளது ஆனால் நாம் அதை வேறு நற்காரியங்களுக்கு பயன்படுத்துவது இல்லை. இக்கேள்விகள் நம்முள் ஏன் எழவில்லை நாம் ஏன் இதை பற்றி சிந்திப்பது இல்லை. மக்களே கடவுள் என்று ஒன்று இல்லை, மேலோகம் என்று ஒன்று இல்லை, சொர்க்கம், நகரம் என்று எதுவும் இல்லை எல்லாம் நாமே உருவக படுத்திக்கொண்டது.

              "படைப்புகளை வணங்காதே, படைத்தவனை வணங்கு..."

                  நாம் நம் தாய் தந்தையால் இவ்வுலகில் படைக்கப்பட்டோம் அவர்கள் தான் நம் கடவுள் மற்றவை எல்லாம் ஒரு உருவாக்கம். நாம் பயணம் செய்யும் பேருந்து, ரயில், விமானம் போன்ற ஊர்திகளை கண்டு பிடித்தவர் மனிதர்கள், நாம் அன்றாட பயன் படுத்தும் எல்லாப்பொருட்களையும் கண்டறிந்தவர்கள் மனிதர்களே பிரம்ம, விஷ்ணு, சிவன், இயேசு, அல்லா போன்றவைகள் கிடையாது.

             "ஆகாஷ், அச்யுதாஹ், ஆதிமூர்த்தி, ஆதிதி, ஆதித்யா, அக்னி, அம்மவரு, அனலா, அனிலா, அனுமதி, அனுராதா, அப், அபம்னபட், ஆரண்யணி, அரவான், அர்த்தநாரி, அர்தா, அர்ஜுனா, அருந்ததி, அர்யுமான், அச்லேசா, அசுரா, அஸ்வயுஜாஉ, அஸ்வினி, ஐயப்பன், அய்யனார், அய்யா
வைகுண்டர். "

                  "பகலா, பகலாமுக்ஹி, பஹுச்சரா மாதா, பலராமா, பானகா முந்தி, பத்ரா, பத்ரகாளி, பாகா, பைரவா, பரணி, பாரதி, பவானி, பீஷ்மா, பூமிதேவி, பூமியா, புத்தமாதா, புவனேஸ்வரி, பிரம்மா, பிரமன், பிராமணி, ப்ரிஹச்பதி, புத்ஹா, புத்தா, புத்தி, புத்தி பல்லின், பாலாஜி, பீரலிங்கேச்வர."

                 "சாமுந்தா, சாமுந்தி, சந்திரா, காதன், ச்ஹின்னமச்டா, சித்திரகுப்தா, தக்க்ஷ, தக்ஷயாணி, தனு, டட்டற்றேயா, தேவா, தேவி, தேவ்நாராயன், தணோன்டறி, தாரா, தர்மா, தர்மா சாஸ்தா, தாத்ரி, துமாவதி, துர்க்கா, திரௌபதி, எசக்கி, கணேஷா, கங்கா, கருடா, காயத்த்ரி, கன்ஷ்யாம், குசைஞ்சி, ஹனுமான், ஹரி, ஹ்ரிஷிகேஷ், இந்திரா, இந்த்ராணி, இன்டிலய்யப்பன், இஷான, இஷ்வரா, ஜகத்தத்ரி, ஜ்யோதிபா, ஜகன்னாத், சுமதி, ஜாஸ்நாத்சி, ஜெய்."   

               "கடுதா சுவாமி, கைவாழ், கலா, காளி, காமா, கமலாம்மிகா, கார்த்திகேயா, கிரட்ட மாதா, கருப்ப சுவாமி, கஷ்யுபா, க்ஹடுஷ்யாம்ஜி, கிரட்ட மூர்த்தி, கிருஷ்ணா,குபேரா, கண்டோபா, கத்யணினி, கண்ணகி, கனகஷி, லக்ஷ்மி, லலிதா, லக்ஷ்மன், மதுரை வீரன், மகாவித்யா, மஹா சிவா, மாறி அம்மன், மார்கண்டேயா, மற்றிகாஸ், மீனாக்க்ஷி, ம்ஹஅசொப, வீர ம்ஹஅச்கோப, மித்ரா, மோகினி, முத்யாலம்மன், மகாலஷ, முக்யப்றன, மூகாம்பிக, முனீஸ்வர."

                "நாக தேவதா, நாக ராஜ, நாக யக்ஷி , நைனா தேவி, நல்லச்ச்சன், நந்தி, நாரதா, நரஷிமா, நாராயணா, நடராஜ, நிர்றித், நிர்ர்ட, நூகாம்பிகா, பரசுராம, பரசிவ, பர்ஜன்ய, பார்வதி, பசுபதி, ப்ரித்வி, புஷன், புருஷா, ராத, ராம, ராமநதி, ரங்கநாத், ரதி, ராத்ரி, ரவி, ர்புஸ், ரேணுகா, ரேவண்ட, ரோகினி, ருத்ர, சாமலேஸ்வரி, சந்தோசி மாதா, சரஸ்வதி, சரண்யா, சதி, ஷக்தி, சாவித்திரி, சாவித்ர, சேல்ஸ,ஷக்தி பீதாஸ், ஷண்டதுர்கா, சிவா, சீதா, சாய் பாபா, சகண்ட, சோம, சுப்ரமணிய, சூர்யா, சோஹா, ச்வாமினரயணன், ஸ்ரீராமன்."
           
                "தாரா, தேஜாஜி, திருபதி திம்மப்பா, திரிபுரா சுந்தரி, த்வஷ்ற்றி, உமா, ஊர்வஷி, உஷாஸ், உக்ராடர, வாரஹா, வருணா, வாசு, வாயு, வீரபத்ரா, வீர ம்ஹஅச்கோப, வெங்கடேஸ்வர, வேட்டக்கொரு, மாகான், விஷ்ணு, வித்தோபா, விஷ்வக்சேன, விஸ்வகார்மா, விவஸ்வத், வள்ளி, யக்க்ஷ, யக்க்ஷி, யாமா, யாமி, எல்லம்மா, யுதிச்திர."

             மேலே கூறப்பட்டுல்ல பெயர்கள் அனைத்தும் நம் நாட்டில் உருவக படுத்தப்பட்டுல்ல கடவுள்களின் பெயர்களே ஆகும். ஒரு கேள்வி ஏன் இத்தனை கடவுள்களும் நம் நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் தோன்ற வில்லை, ஏன் பிரம்மன் ஆஸ்திரேலியாவில் அவதாரம் எடுக்க வில்லை, ஏன் அனைவரும் இந்நாட்டிலேயே குப்பை கொட்டுகிறார்கள் ஏனென்றால் இவர்களை உருவாக்கியது நாம்.

               இத்தனை கடவுள்கள் இருந்தாலும் ஏன் நம் நாட்டில் இன்னும் பட்டினி சாவுகள் இருக்கின்றன, ஏன் நம் நாடு வறுமையாக உள்ளது, ஏன் தீவிரவாதம் தலையோங்கி நிற்கிறது, ஏன் ஊழல் நடக்கிறது, ஏன் கொலை, கொள்ளை போன்றவைகள் நடக்கிறது, ஏன் கோவிலில் நடக்கும் கலவையே கடவுள் கண்டுபிடிக்காமல் காவல் துறை கண்டுபிடிக்கிறது, ஏன் ஜாதி, மதம், இனம் வெறி இருக்கிறது, ஏன் மக்களிடையே, நாடுகள் இடையே ஒற்றுமை இல்லாமல் சண்டை இடுகிறார்கள். ஆயிரம் கணக்கில கடவுள்கள் இருக்கிறார்களே நம் நாட்டில் ஒவ்வொருவர் ஒரு ஒரு தீங்கினை சரி செய்தலும் நம் நாடு செழுமையாக இருக்குமே ஏன் அதை கடவுள்கள் செய்யாமல் இருக்கிறார்கள் ஏனென்றால் கடவுள் என்று எதுவும் இல்லை இருந்தால் தான் நம் நாடு செழுமையுடன் இருக்குமே.

               மக்களே இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி ஏன் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வுலகில் வாழ்வது நாம், இவ்வுலகம் நமற்க்கு சொந்தமானவை, இருக்கும் மனிதர்கள் நம் இனத்தவர்கள் பிறகு ஏன் நம்மிடையே வேற்றுமை, ஒற்றுமையாக இருப்போம். நமக்கு துன்ப காலத்தில் உதவும் மனிதன் தான் நமக்கு கடவுள். 

             நாம் தான் இன்னொரு உயிரை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த போகிறோம் அவர்களுக்கு இவ்வுலகை மாசு படுத்தாமல் கொடுக்க வேண்டும். அவர்களும் நம்மை போல் வாழ வேண்டும்.  நாம் வாழும் பூமியை சொர்கமாக மாற்றுவோம். பசுமை செழிக்கட்டும் நம் பூமியில் ஒன்றாக பாடுபடுவோம்....

Monday, January 23, 2012

மொழி

             இங்கு பலபேருக்கு தமிழன் என்று சொல்வது பிடிப்பது இல்லை, தமிழ் நாடு என்று சொல்வதிலும் நாட்டம் இல்லை, யாருக்கும் அதில் விருப்பம் இல்லை. ஒரு படத்தில் அறிமுகம் ஆகிய பின் அகில உலக ரசிகர் மன்றம் என்று தான்  பெயர் சூட்டுகிறான். கட்சி ஆரம்பித்தாலும் தேசிய, திராவிட, அதவிட, இதவிட என்று வைகிரர்களே ஒழிய தமிழுக்காக எவனும் வாழ்வதாகவும், தலை வணங்குவதாகவும் தெரியவில்லை என்னெனில் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறான்.

           கலையும், இல்லகியமும் மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தக்கூடிய  ஒரு பெரிய ஊடகம் என்று மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் அப்படி ஒரு ஊடகம் தற்போது இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். கண்டிப்பாக அப்படி ஒரு புரட்சியை உண்டாக்குவதாக இன்றைய ஊடகங்கள் தென்படுவது இல்லை. இன்றைய திரைபடங்களுக்கு படிக்கல்லாய் விளங்குவது பண்டயர்களின் மேடை நாடகம், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்றவை ஆகும்.

          தமிழர்களின் நிறமாக கருதப்படுவது கருப்பு, நம்முடைய நிறமான கருப்பு வெள்ளையாக இருப்பவர்களின் உடலில் இருந்தால் அது மச்சம். அவர்களின் வெள்ளை நம் உடலில் இருந்தால் அது தேம்பல், அவர்கலின் வெள்ளை நம் உள்ளங்காலில் இருக்கிறது. கருப்பாக இருக்கும் கரும்பிலிருந்து தான் இனிப்பான சர்க்கரை வருகிறது என்று நம் நிறமான கருப்பிற்கு எடுத்துகாட்டாக நம் முன்னோர்கள் கூறி சென்றார்கள்.

         மக்கள் கவிஞன்  பட்டுகோட்டை. புரட்சி கவிஞன், கவிபேரரசு, அந்த அரசு, இந்த அரசு என்று இருகிறார்கள் ஆனால் பட்டுகோட்டை மட்டும் எவ்வாறு மக்கள் கவிஞன் ஆனான்.

        "பாலாறு பாயுது  தேனாறு பாயுது  ஆனால் மக்கள் வயிறு காயுது"

என்று பாடியதால் அவன் மக்கள் கவிஞன். உழைக்கும் மக்களை, பசித்த மக்களை, பாடுபடும் மக்களை பற்றி சிந்தித்தான் ஆதலால் அவன் மக்கள் கவிஞன்.
          நாம் வாழ்வது தமிழ் நாடா? இல்லை இது இங்கிலாந்த்(England) நாட்டின் ஒரு மாநிலம், தமிழ் என்ற ஒரு நாடு எவரும் இங்கு தமிழன் கிடையாது, எவன் நாவிலும் தமிழ் இல்லை.

      "என்ன மாச்ச(macha) பீல்(feel) பண்ற எல்லா கரெக்ட்(correct) ஆயிடும் "

என்ன வசனம் இது, இது தமிழா ?

நாம் ஒருவரிடம் விலாசத்தை கேட்டால் இல்லை நம்மிடம் எவரேனும் விலாசம் கேட்டால் எவ்வாறு பதில் சொல்கிறோம் நாம்.

    "நேரா ச்ற்றைக்ஹ்ட் (straight) அஹ போங்க" , "லேபிட்(left) ல  கட் பண்ணுங்க " , "ரைட்(right) ல கட் பண்ணுங்க"

இது தமிழா இல்லை இது வேற ஒரு மொழி.

          நம்மொழியில் பிறமொழியை கலப்பது எவனுக்கும் வருத்தமளிப்பது  இல்லை , வெட்கப்படுவதும் இல்லை ஏன் என்றால் இங்கு எவனும் தமிழனே இல்லை என்பது தான் உண்மை. "நாவில் வாழாத தமிழ் எப்படி நாட்டில் வாழும்". தமிழ் எழுத, பேச, படிக்க தெரிந்தவன் எவனும் தமிழன் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவன். திருக்குறளை படிக்காமல் மூலதனத்தை படிக்கவே படிக்காதே. புரட்சி, எது புரட்சி. மொழி சிதைந்தால் ஒரு இனம் அழியும் இது வரலாற்று உண்மை, சொந்த மொழி படிக்க, பேச, எழுத தெரியாத எந்த இனமும் இந்த உலகில் வாழ்ந்ததாக ஒரு சின்ன செய்தி கூட கிடையாது.

"உள்ள மொழியை ஒழுங்காக பேசுகிறாய இல்லை பிறகு எதற்கு ஊரன் மொழி "

           உலகத்தில்  எவனாவது, எந்த நாட்டிலாவது தன் பெயருக்கு முன்னால் தன் தகப்பன் பெயரை வேற ஒரு மொழியில் போடும் அவல நிலை இருகிறதா இல்ல ஆனால் நம் நாட்டில் உண்டு. "முனியாண்டி மகன் நாகராசு மு.நாகராசு என்று எழுதுவது இல்லை எம்  என்று ஒரு கீரீடத்தை தூக்கி தகப்பனுக்கு சூட்டுகிறான் ஏன் என்றல் அவன் வெள்ளைகரானுக்கு பிறந்தவனாயிற்றே ஒருவன் இதற்காக வெட்க படுகிறானா இந்த தேசத்தில். தன் தகப்பன்  பெயரை தமிழில் எழுத முடியாதவன் எப்படி இந்த சமூகத்தை திருத்த முடியும்.எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நான் எப்படி இந்த சமூகத்தை  மாற்றுவேன். நாக்கை திருத்த முடியாதவன் தமிழன் அவன் எப்படி நாட்டை திருத்துவான்.

         ஒரு தாநூன்றித்தனம்ந ஒரு மெத்தனம், ஒரு கேனத்தனம், எது பற்றியும், புறிதலும், அக்கறையும் இல்லாத தமிழன் பேசுகிறான் தமிழை இவ்வாறு. இது எங்கு கொண்டு பொய் நிற்கும். ஒரு வீரம் நிறைந்த தொன்ம தேசிய இனத்தை ஒரு அழிவில் கொண்டு போய் நிறுத்தும். ஏறக்குறைய இந்த இனம் அழிந்து விட்டது யாரும் மறுப்பதற்கு இல்லை.

          தமிழ் பேசினால் தான் நீங்களும் நானும் தமிழன். பிரெஞ்சு பேசினால் பிரெஞ்ச்காரன்,பிரிட்டிஷ் பேசினால் பிரிட்டிஷ்காரன், ஆங்கிலம் பேசினால் ஆங்கிலன், மலையாளம் பேசினால் மலையாளி, அதே போல் தமிழ் பேசினால் தான் தமிழன் எவன் பேசுகிறான், எவனும் பேசுவது இல்லை ஆனால் நாம் சொல்லிக்கொள்கிறோம் தமிழன் என்று.

          தமிழனை போல் நன்றி கெட்ட ஒரு ஈன ஜாதி இனம் வேறு எந்த நாட்டிலாவது உண்டா ? எல்லா நாட்டிலும் தெரு வீதிகளில் அவன் மொழியை தவிர வேறு எந்த மொழியிலாவது பெயர் பலகை உண்டா இல்லை. வேறு மொழயில் பேசுகிறான இல்லை ஆனால் நாம் அப்படியா  உயிர் போகும் நிலையில் உதவிய ஒருவனுக்கு "நன்றி" என்று தமிழில் கூற நாவருமா ? தேங்க் யு தான் வரும். நன்றி கெட்டவன் தமிழன் இன உணர்வு மான உணர்வு ஒன்றும் இல்லை அவனுக்கு. ஏன் சோறு சாபிட்டால் தானே எல்லாம் இருக்கும் அவன் தான் ரைஸ் சாபிடுகிரானே என்ன இருக்கும் ஒரு எழவும் இருக்காது. தண்ணீர் குடித்தால் தானே நல்ல ரத்தம் ஓடும் அவன் தான் வாட்டர் குடிகிறானே.

          மொழி சிதைந்தால் ஒரு இனம் அழியும் இது உலக வரலாறு. இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவது தான் புரட்சி அந்த புரட்சியை தான் நாம் செய்ய வேண்டும். ஆங்கிலம் கற்கவில்லை என்றால் இறந்து விடுவாயா என்றால் ஆங்கிலத்தை கற்று தேறு. உலகின் எல்லா மொழிகளையும் கற்றுத்தேறுங்கள் பன்மொழி பண்டிதராகுங்கள் அதே போல் நம்மொழியும் கற்றுத்தேருங்கள். ஆங்கிலம் பேசினால் ஆங்கிலத்தில் மட்டும் பேசுங்கள். தமிழ் பேசினால் தமிழிலேயே பேசுங்கள் மொழியை கலப்பினம் செய்யாதிர்கள். நம் மொழியை காப்பாற்றுங்கள் வாழவிடுங்கள். 

           வெள்ளை காரனிடம் வணக்கம் வைக்காதே அது முட்டால் தனம். சொந்த அண்ணன், தம்பியிடம் குட் மோர்னிங்(Good Morning) சொல்லாதே இது அடி முட்டால் தனம். இது இரண்டுதான் வித்தயாசம் தெரிந்துக்கொள். உன் வீடுகளில் எத்தனை ஜன்னல்கள் இருக்கிறதோ அத்தனை ஜன்னனல்களாக உலக மொழியை வைத்துக்கொள் ஆனால் நுழைவாயிளாக உள்ள தலை வாசலை நம் தாய் தமிழை வைத்துக்கொள். உலகின் எல்லா நாடுகள் அவர்கள் மொழியை பாதுகாத்து வைத்திருக்கின்றனர் ஆனால் தமிழன் கால் செருப்பை விட கேவலமாக தன தாய் மொழியை நினைத்து கொண்டிருக்கிறான் அது தான் ஈனம், அவமானம்.

         பாலில் தண்ணீர் கலந்தால் வாங்குவது இல்லை, எரிபொருளில் தண்ணீர் கலந்தால் வாங்குவது இல்லை, எண்ணையில் தண்ணீர் கலந்தால் வாங்குவது இல்லை ஆனால் நம் தாய் மொழியில் கலப்படம் இருக்கலாம். தமிழில் மலையாளம், தெலுங்கு,கன்னடம்,ஆங்கிலம் போன்ற மொழிகளை கலந்து பேசலாம் அதற்காக எவனும் கவலைப்படுவதில்லை, வெட்கப்படுவதில்லை, நாம் தமிழனே இல்லை, அது தான் உண்மை.



தமிழ் நாடு கலை இலக்கிய பெரும்மன்றம்  நடத்திய மக்கள் கலை விழாவின் பொது, ஐயா பெரியாருடைய  பேரன், மாமேதை மார்க்ஸ் இன்  மாணவன், தம்பி பிரபாகரனுடைய தம்பியாகிய சீமான் மேடையில் உரைத்த உரைகளாகும்.

         தமிழர்களே நம் தாய் மொழியாகிய தமிழை காப்பாற்றுங்கள், மொழியை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.நம் மொழியில் மற்ற மொழியை கலப்பினம் செய்யாமல் பேசுங்கள். தமிழ் இனத்தை மதியுங்கள், தமிழன் என்று பெருமையுடன் சொல்லுங்கள்.


  வாழ்க தமிழ்

Friday, January 20, 2012

பயம்

               உலகில் சுவாமி விவேகானந்தர் மிகவும் வெறுத்தது ஒன்று உண்டு என்றால், அது 'பயம்'தான்! ''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்'' என்று உரைத்த சுவாமி விவேகானந்தர், இதுகுறித்து ஒரு கதையும் சொல்லியிருக்கிறார்.

காட்டில் கலைமான் ஒன்று வசித்தது. ஒருநாள் அதன் குட்டி, ''உங்களது பெரிய கொம்பு மிக அழகாக இருக்கிறதே!'' என வியப்புடன் கேட்டது.

''ஆமாம்... இந்தப் பெரிய கொம்பு இருப்பதால்தான் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களும் என்னைக் கண்டு பயந்து ஓடுகின்றன'' என்றது கலைமான். அப்போது, திடீரென சிங்கத்தின் கர்ஜனை வெகு தொலைவில் கேட்டது. கலவரம் அடைந்த கலைமான், ஓடி மறைந்தது! குட்டி மான், தந்தையைக் காணாமல் நின்றது. சற்று நேரம் கழித்து கலைமான் வந்தது. ஆனால் அதன் பயம் நீங்கவில்லை!

''பெரிய மிருகங்களையும் கொம்பை வைத்து பயமுறுத்துவேன் என்றீர்களே... இப்போது எங்கே போனீர்கள்?'' எனக் கேட்டது குட்டி மான்.

இதற்கு, ''ஹும்.. என்னமோ தெரியவில்லை... நான் தைரியசாலிதான். ஆனால், சிங்கத்தின் குரலைக் கேட்டதும் பயந்து ஓடிவிடுகிறேன்'' என்றதாம் கலைமான்!

வீறாப்பாகப் பேசும் நம்மில் பலரது நிலைமையும் இப்படித்தான். சிக்கலான நேரங்களில் நமது இயல்பே பயப்படுவதுதான். இதற்கு சரியான மருந்து... 'பயமில்லை... பயமில்லை என்று எப்போதும் முழங்கு; 'பயம் கொள்ளாதே' என எல்லாரிடமும் சொல். பயமே மரணம், பயமே பாவம், பயமே நரகம்' என அறிவுறுத்தினார் விவேகானந்தர். 'மனிதன், ஓர் உண்மையில் இருந்து மற்றொரு உண்மைக்குப் போகிறான்' என்றார் சுவாமிஜி. ஆனால், 'மனிதன் ஒரு பயத்திலிருந்து மற்றொரு பயத்துக்கு போகிறான்' என்பதே இன்றைய நிலைமை!
இளங்கன்று பயம் அறியாது என்பர். இன்றோ, பிஞ்சு உள்ளங்களிலும் பயத்தை விதைத்து விட்டோம்.

படிக்கும்போது தேர்வு பயம்; பின்னர் தேர்வுகளில் தேறுவோமா என்ற பயம்; தேறியதும், உயர் கல்விக்கு இடம் கிடைக்குமா..? கிடைத்ததும், முடிப்போமா..? முடித்ததும், வேலை கிடைக்குமா..? வேலை கிடைத்ததும், சம்பளம், பதவி உயர்வு கிடைக்குமா..? பின்னர் நல்ல துணை அமையுமா..? அமைந்ததும், குழந்தை பிறக்குமா..? பிறந்ததும், எல்கேஜி அட்மிஷன் கிடைக்குமா..? கிடைத்ததும், வாரிசு நல்லபடி வளருமா..? இப்படி பயத்தில் தொடங்கி, பயத்திலேயே உழன்று, பயத்திலேயே தொடரும்படி வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். உண்மையான பயத்தைவிட, கற்பனை பயத்திலேயே நாட்களை அதிகம் கழிக்கின்றனர்!
பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்கிறார்கள். ஆனால் நான் கூறுகிறேன்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் சுவாமிஜி. இளைஞன் என்பதற்கு சுவாமிஜி சொல்லும் இலக்கணம் என்ன தெரியுமா? 'பயமற்றவனே இளைஞன்!'


             2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 13 - 15 வயதுள்ள இளம் வயதினரிடம் கணக்கெடுத்ததில் அவர்கள் எதன் மீது, எத்தகைய பயம் கொள்கிறார்கள் என்று ஆராயப்பட்டது. அதில் முக்கியமாக கருதப்பட்ட சிறந்த 10 வகையான பயங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.
1. தீவிரவாதத் தாக்குதல்கள், 2.சிலந்திகள், 3. இறப்பு, 4. முயற்சியில் தோல்வி, 5. போர், 6. உயரங்கள், 7. குற்றவாளி/குழு வன்முறை, 8. தனிமை, 9. வருங்காலம் பற்றிய கவலை, 10. அணு ஆயுதப் போர் ஆகியவைகளாகும்.

அளவற்ற பயங்கள் இருந்தபோதிலும், சிலருக்கு கேள்விப்படாத சில பயங்களும் ஏற்படுவதுண்டு.

அந்த அபூர்வமான 10 வகையான பயங்கள்.
1. புல்லாங்குழலைப் பார்க்க, இசையைக் கேட்க பயம் - ஆலொ ஃபோபியா
2. சாக்லெட் போன்ற பொருட்கள் வாயின் உட்புறம் மேலன்னத்தில் ஒட்டிக் கொள்வதால் பயம் - அரக்கி புடிரோ ஃபோபியா
3.முழங்கால்களைப் பார்க்க, நினைக்க பயம் - ஜெனு ஃபோபியா
4. நீளமான சொற்களுக்கு பயம் - (Hippo) கிப்போ பொடோ மான்ச்ட் ரஸ் ஸ்ஃயுப்ட் அலிஓ ஃபோபியா
5. நூல் மற்றும் நூல்கண்டைப் பார்த்து பயம் - லினனோ ஃபோபியா
6. பாடல்களைப் பார்க்க, படிக்க பயம் - மெட் ரோ ஃபோபியா
7. ஷெல் மீன் களைப் கண்டால் பயம் - ஆஸ்ட் ரா கோனோ ஃபோபியா
8. மஞ்சள் நிறத்தைக் காண பயம் - ஃசாந்தோ ஃபோபியா
9. சிரிக்க பயம் - ஜீலியோ ஃபோபியா
10. பயம் என்று நினைத்தால் பயம் - ப்போபோ ஃபோபியா

Thursday, January 19, 2012

இறக்கமற்றவர்கள்

               

               நாம் உயிர் வாழ தேவைகளில் முக்கியமானவை உணவு. நாம் படித்தது, அன்றாட வேலை பார்ப்பது எல்லாம் ஒரு வேளை உணவை நம் குடும்பத்துடன் உண்பதற்காகதான். அந்த உணவின் ருசியை நாம் நம் தாயிடமிருந்து, அவள் சமைத்து பரிமாறும் உணவிலிருந்துதான் உணர முடியும்.

              உணவை பக்குவமாக சமைப்பது ஒரு கலையாக கருதப்படுகிறது. நம் நாட்டில் ஏன் மற்ற நாடுகளிலும் சமையல் ஒரு கலையாக நடத்தப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சீனாவில் இக்கலை கொலையாக, இல்லை இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்படி பட்ட சில இறக்கமற்றவர்கள் சீனாவில் உள்ளார்கள். இவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு போட்டியாக இருகின்றது.

              நம் நாட்டிலும் நாம் மாமிசம் உண்கிறோம் ஆனால் எவரும் அம்மாமிசத்தை உயிருடன் உண்பது இல்லை, அப்படியும் உயிருடன் உண்பவர் இவ்வுலகில் இருகிறார்களா என தெரியவில்லை. நம் நாட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றி,மீன் முதலியவற்றின் மாமிசத்தை சமைத்து உண்கிறோம் ஆனால் சீனர்கள் அவற்றை உயிருடன் சமைத்து பரிமாறி உண்கிறார்கள். இவர்கள் மனித வர்கத்தில் இறக்கமற்றவர்கள் மனித நாகரீகத்திற்கு உட்பட்டவர்களே இல்லை. இவர்கள் வேற்றுகரக வாசிகளாகதான் நாம் கருத வேண்டும்.

              வேற்றுகரக வாசிகளும் இறக்கமுடயவர்களாக இருந்தால் இவர்களை எந்த வர்கத்தில் சேர்ப்பது என்பது கேள்வியாகத்தான் இருக்கும். மேலே உள்ள படத்தை பார்க்கும் போது அதில் துடித்து கொண்டிருக்கும் பாம்பு, மீன்களை எல்லாம் பார்க்கும் போது மனிதர்களாகிய நம் மனமானது வருந்த வேண்டும். அனால் சீனர்களின் மனம் வருந்துவதாக தெரியவில்லை ஏனெனில் இவர்கள் மனிதர்கள் இல்லை.

             இவர்களை எவரேனும் இப்படி சமைத்து உன்ன மாட்டார்கள் என்ற எண்ணம் நமக்குள் வரும் அது இயல்பு இருந்தாலும் நாம் அப்படி நினைப்பது மிகவும் தவறானது. அப்படி நினைப்பவர்கள் அவர்கள் வர்கதில் ஒருவராகதான் இருப்பார்கள்....

             இனி இப்படிபட்ட கொடூரங்களை எவரும் இவ்வுலகில் ஏன் எவ்வுலகில் செய்ய வேண்டாம் என எதிர்பாக்கிறேன் .
                                                     
                                                              **************


Wednesday, January 18, 2012

வறுமை








        தவறு....
        என்ன தவறு செய்தோம் நாங்கள்?






பிறந்தது எங்கள் தவறா ?
இல்லை
இவர்களுக்கு பிறந்தது எங்கள் தவறா ?
இல்லை
இந்நாட்டில் பிறந்தது எங்கள் தவறா ?

எது எங்கள் தவறு சொல்லுங்கள்........






விதைக்க பட்டோம்
துளிர் விட்டு எழுந்து நின்றோம்
மேலும் வளர முடிய வில்லை இந்நாட்டில்

வாட்டியது வறுமை
பாடுபடுத்தியது பசி
                                                                                                                                                                  தாழ்த்த பட்டோம்
                                                      பின்னுக்கு தள்ளப்பட்டோம்.




இச்சாபத்திளிருந்து மீண்டு வர
என்ன நாங்கள் செய்வது?

வேலை...

பிச்சை....

மாய்த்து கொள்வது...


                                          பெற்றோரால் கை விடப்பட்டோம்
                                          இந்த தாய் நாட்டில்
                                          அன்பு காட்ட, அரவணைக்க
                                          உதவ முன் வருமா எங்கள் தாய் நாடு ???????
                                          காத்திருக்கிறோம் கேள்வியுடன் நாங்கள்..
                                          உதவுங்கள்..........................................................................

Tuesday, January 17, 2012

காதல்





பெண்களின் ஆயுதம் காதல்
ஆண்களின் பலவீனம் காதல்.......

பெண்

பிறப்பு இறப்பு
இவ்விரண்டும் வாழ்கையின் இருதருனங்கள்
இவ்விரண்டிற்கும் காரணமாக இருப்பவள்
பெண்
பிறப்பிற்கு காரணம் தாய்
இறப்பிற்கு காரணம் காதலி...
உயிர் கொடுப்பவள் தாய்
உயிர் எடுப்பவள் காதலி...