Monday, January 23, 2012

மொழி

             இங்கு பலபேருக்கு தமிழன் என்று சொல்வது பிடிப்பது இல்லை, தமிழ் நாடு என்று சொல்வதிலும் நாட்டம் இல்லை, யாருக்கும் அதில் விருப்பம் இல்லை. ஒரு படத்தில் அறிமுகம் ஆகிய பின் அகில உலக ரசிகர் மன்றம் என்று தான்  பெயர் சூட்டுகிறான். கட்சி ஆரம்பித்தாலும் தேசிய, திராவிட, அதவிட, இதவிட என்று வைகிரர்களே ஒழிய தமிழுக்காக எவனும் வாழ்வதாகவும், தலை வணங்குவதாகவும் தெரியவில்லை என்னெனில் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறான்.

           கலையும், இல்லகியமும் மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தக்கூடிய  ஒரு பெரிய ஊடகம் என்று மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் அப்படி ஒரு ஊடகம் தற்போது இருக்கிறதா என்று நாம் பார்க்க வேண்டும். கண்டிப்பாக அப்படி ஒரு புரட்சியை உண்டாக்குவதாக இன்றைய ஊடகங்கள் தென்படுவது இல்லை. இன்றைய திரைபடங்களுக்கு படிக்கல்லாய் விளங்குவது பண்டயர்களின் மேடை நாடகம், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்றவை ஆகும்.

          தமிழர்களின் நிறமாக கருதப்படுவது கருப்பு, நம்முடைய நிறமான கருப்பு வெள்ளையாக இருப்பவர்களின் உடலில் இருந்தால் அது மச்சம். அவர்களின் வெள்ளை நம் உடலில் இருந்தால் அது தேம்பல், அவர்கலின் வெள்ளை நம் உள்ளங்காலில் இருக்கிறது. கருப்பாக இருக்கும் கரும்பிலிருந்து தான் இனிப்பான சர்க்கரை வருகிறது என்று நம் நிறமான கருப்பிற்கு எடுத்துகாட்டாக நம் முன்னோர்கள் கூறி சென்றார்கள்.

         மக்கள் கவிஞன்  பட்டுகோட்டை. புரட்சி கவிஞன், கவிபேரரசு, அந்த அரசு, இந்த அரசு என்று இருகிறார்கள் ஆனால் பட்டுகோட்டை மட்டும் எவ்வாறு மக்கள் கவிஞன் ஆனான்.

        "பாலாறு பாயுது  தேனாறு பாயுது  ஆனால் மக்கள் வயிறு காயுது"

என்று பாடியதால் அவன் மக்கள் கவிஞன். உழைக்கும் மக்களை, பசித்த மக்களை, பாடுபடும் மக்களை பற்றி சிந்தித்தான் ஆதலால் அவன் மக்கள் கவிஞன்.
          நாம் வாழ்வது தமிழ் நாடா? இல்லை இது இங்கிலாந்த்(England) நாட்டின் ஒரு மாநிலம், தமிழ் என்ற ஒரு நாடு எவரும் இங்கு தமிழன் கிடையாது, எவன் நாவிலும் தமிழ் இல்லை.

      "என்ன மாச்ச(macha) பீல்(feel) பண்ற எல்லா கரெக்ட்(correct) ஆயிடும் "

என்ன வசனம் இது, இது தமிழா ?

நாம் ஒருவரிடம் விலாசத்தை கேட்டால் இல்லை நம்மிடம் எவரேனும் விலாசம் கேட்டால் எவ்வாறு பதில் சொல்கிறோம் நாம்.

    "நேரா ச்ற்றைக்ஹ்ட் (straight) அஹ போங்க" , "லேபிட்(left) ல  கட் பண்ணுங்க " , "ரைட்(right) ல கட் பண்ணுங்க"

இது தமிழா இல்லை இது வேற ஒரு மொழி.

          நம்மொழியில் பிறமொழியை கலப்பது எவனுக்கும் வருத்தமளிப்பது  இல்லை , வெட்கப்படுவதும் இல்லை ஏன் என்றால் இங்கு எவனும் தமிழனே இல்லை என்பது தான் உண்மை. "நாவில் வாழாத தமிழ் எப்படி நாட்டில் வாழும்". தமிழ் எழுத, பேச, படிக்க தெரிந்தவன் எவனும் தமிழன் என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவன். திருக்குறளை படிக்காமல் மூலதனத்தை படிக்கவே படிக்காதே. புரட்சி, எது புரட்சி. மொழி சிதைந்தால் ஒரு இனம் அழியும் இது வரலாற்று உண்மை, சொந்த மொழி படிக்க, பேச, எழுத தெரியாத எந்த இனமும் இந்த உலகில் வாழ்ந்ததாக ஒரு சின்ன செய்தி கூட கிடையாது.

"உள்ள மொழியை ஒழுங்காக பேசுகிறாய இல்லை பிறகு எதற்கு ஊரன் மொழி "

           உலகத்தில்  எவனாவது, எந்த நாட்டிலாவது தன் பெயருக்கு முன்னால் தன் தகப்பன் பெயரை வேற ஒரு மொழியில் போடும் அவல நிலை இருகிறதா இல்ல ஆனால் நம் நாட்டில் உண்டு. "முனியாண்டி மகன் நாகராசு மு.நாகராசு என்று எழுதுவது இல்லை எம்  என்று ஒரு கீரீடத்தை தூக்கி தகப்பனுக்கு சூட்டுகிறான் ஏன் என்றல் அவன் வெள்ளைகரானுக்கு பிறந்தவனாயிற்றே ஒருவன் இதற்காக வெட்க படுகிறானா இந்த தேசத்தில். தன் தகப்பன்  பெயரை தமிழில் எழுத முடியாதவன் எப்படி இந்த சமூகத்தை திருத்த முடியும்.எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத நான் எப்படி இந்த சமூகத்தை  மாற்றுவேன். நாக்கை திருத்த முடியாதவன் தமிழன் அவன் எப்படி நாட்டை திருத்துவான்.

         ஒரு தாநூன்றித்தனம்ந ஒரு மெத்தனம், ஒரு கேனத்தனம், எது பற்றியும், புறிதலும், அக்கறையும் இல்லாத தமிழன் பேசுகிறான் தமிழை இவ்வாறு. இது எங்கு கொண்டு பொய் நிற்கும். ஒரு வீரம் நிறைந்த தொன்ம தேசிய இனத்தை ஒரு அழிவில் கொண்டு போய் நிறுத்தும். ஏறக்குறைய இந்த இனம் அழிந்து விட்டது யாரும் மறுப்பதற்கு இல்லை.

          தமிழ் பேசினால் தான் நீங்களும் நானும் தமிழன். பிரெஞ்சு பேசினால் பிரெஞ்ச்காரன்,பிரிட்டிஷ் பேசினால் பிரிட்டிஷ்காரன், ஆங்கிலம் பேசினால் ஆங்கிலன், மலையாளம் பேசினால் மலையாளி, அதே போல் தமிழ் பேசினால் தான் தமிழன் எவன் பேசுகிறான், எவனும் பேசுவது இல்லை ஆனால் நாம் சொல்லிக்கொள்கிறோம் தமிழன் என்று.

          தமிழனை போல் நன்றி கெட்ட ஒரு ஈன ஜாதி இனம் வேறு எந்த நாட்டிலாவது உண்டா ? எல்லா நாட்டிலும் தெரு வீதிகளில் அவன் மொழியை தவிர வேறு எந்த மொழியிலாவது பெயர் பலகை உண்டா இல்லை. வேறு மொழயில் பேசுகிறான இல்லை ஆனால் நாம் அப்படியா  உயிர் போகும் நிலையில் உதவிய ஒருவனுக்கு "நன்றி" என்று தமிழில் கூற நாவருமா ? தேங்க் யு தான் வரும். நன்றி கெட்டவன் தமிழன் இன உணர்வு மான உணர்வு ஒன்றும் இல்லை அவனுக்கு. ஏன் சோறு சாபிட்டால் தானே எல்லாம் இருக்கும் அவன் தான் ரைஸ் சாபிடுகிரானே என்ன இருக்கும் ஒரு எழவும் இருக்காது. தண்ணீர் குடித்தால் தானே நல்ல ரத்தம் ஓடும் அவன் தான் வாட்டர் குடிகிறானே.

          மொழி சிதைந்தால் ஒரு இனம் அழியும் இது உலக வரலாறு. இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவது தான் புரட்சி அந்த புரட்சியை தான் நாம் செய்ய வேண்டும். ஆங்கிலம் கற்கவில்லை என்றால் இறந்து விடுவாயா என்றால் ஆங்கிலத்தை கற்று தேறு. உலகின் எல்லா மொழிகளையும் கற்றுத்தேறுங்கள் பன்மொழி பண்டிதராகுங்கள் அதே போல் நம்மொழியும் கற்றுத்தேருங்கள். ஆங்கிலம் பேசினால் ஆங்கிலத்தில் மட்டும் பேசுங்கள். தமிழ் பேசினால் தமிழிலேயே பேசுங்கள் மொழியை கலப்பினம் செய்யாதிர்கள். நம் மொழியை காப்பாற்றுங்கள் வாழவிடுங்கள். 

           வெள்ளை காரனிடம் வணக்கம் வைக்காதே அது முட்டால் தனம். சொந்த அண்ணன், தம்பியிடம் குட் மோர்னிங்(Good Morning) சொல்லாதே இது அடி முட்டால் தனம். இது இரண்டுதான் வித்தயாசம் தெரிந்துக்கொள். உன் வீடுகளில் எத்தனை ஜன்னல்கள் இருக்கிறதோ அத்தனை ஜன்னனல்களாக உலக மொழியை வைத்துக்கொள் ஆனால் நுழைவாயிளாக உள்ள தலை வாசலை நம் தாய் தமிழை வைத்துக்கொள். உலகின் எல்லா நாடுகள் அவர்கள் மொழியை பாதுகாத்து வைத்திருக்கின்றனர் ஆனால் தமிழன் கால் செருப்பை விட கேவலமாக தன தாய் மொழியை நினைத்து கொண்டிருக்கிறான் அது தான் ஈனம், அவமானம்.

         பாலில் தண்ணீர் கலந்தால் வாங்குவது இல்லை, எரிபொருளில் தண்ணீர் கலந்தால் வாங்குவது இல்லை, எண்ணையில் தண்ணீர் கலந்தால் வாங்குவது இல்லை ஆனால் நம் தாய் மொழியில் கலப்படம் இருக்கலாம். தமிழில் மலையாளம், தெலுங்கு,கன்னடம்,ஆங்கிலம் போன்ற மொழிகளை கலந்து பேசலாம் அதற்காக எவனும் கவலைப்படுவதில்லை, வெட்கப்படுவதில்லை, நாம் தமிழனே இல்லை, அது தான் உண்மை.



தமிழ் நாடு கலை இலக்கிய பெரும்மன்றம்  நடத்திய மக்கள் கலை விழாவின் பொது, ஐயா பெரியாருடைய  பேரன், மாமேதை மார்க்ஸ் இன்  மாணவன், தம்பி பிரபாகரனுடைய தம்பியாகிய சீமான் மேடையில் உரைத்த உரைகளாகும்.

         தமிழர்களே நம் தாய் மொழியாகிய தமிழை காப்பாற்றுங்கள், மொழியை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.நம் மொழியில் மற்ற மொழியை கலப்பினம் செய்யாமல் பேசுங்கள். தமிழ் இனத்தை மதியுங்கள், தமிழன் என்று பெருமையுடன் சொல்லுங்கள்.


  வாழ்க தமிழ்

1 comment:

  1. shanthi priya : thangalathu mozhi pattrai kandu nan viyakindren

    ReplyDelete