Tuesday, May 13, 2014

இலக்கு



நான் எங்கு இருக்கிறேன் ?

நான் தேர்ந்தெடுத்த பாதை சரியானதா ?

நான் விரும்பிய இலக்கை அடைந்து விட்டேனா ? இல்லை இலக்கை நோக்கி என் பயணத்தை தொடர வேண்டுமா ?

என் இப்படி ஒரு தடுமாற்றமான நிலை.

தவறு நேர்ந்திருக்குமோ ?

ஐயோ ! அப்படி என்றால் நான் வழி மாறி பயணித்துக்கொண்டிருக்கேனா ?

எங்கு தவறு நடந்திருக்கும் ?

என் படைப்பிலா ? இருக்கவே இருக்காது.

என் வளர்ப்பிலா ? நிச்சயமாக இருக்காது.

பின்பு எங்கு நடந்து இருக்கும் ?

நான் தேர்ந்தெடுத்த பாதை ? கேள்விக்குறி !!!

சரி, சற்று நான் பயணித்த பாதையில் பின்நோக்கி செல்வோம்.

பத்தாம் வகுப்பு வரை விஞ்ஞானி, ஓவியர். பத்தாம் வகுப்பு முடித்ததும் கணினி பொறியாளர்.  பதினோரம், பண்ணிரெண்டாமில் இயக்குனர், மென்பொருள் பொறியாளர், அரசாங்க வேலை. இப்படி பல இலக்குகளுடன் பயணம் தொடர்ந்தது.

ஒரு வழியாக அலைந்து திரிந்து கணினி பயன்பாடு இளநிலையில் கல்லூரி பயணத்தை தொடர்ந்தேன். மூன்று வருட உழைப்புக்கு ஒரு வெள்ளி பதக்கமும், இந்திய தொழில்நுட்ப நிறுவணத்தில் ஒரு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்த்து இரண்டரை வருட பயணங்களும் ஓடி விட்டன. இருந்தாலும் மனதில் சிறு குழப்பம், இதுதான் என் இலக்கா ? இதைத்தான் நான் ஆசைப்பட்டேனா ? இல்லை என் இலக்கு வேறு பிறகு நான் என் இங்கு இருக்கிறேன். நான் கடந்து வந்த என் பாதையையு பயணத்தையும் குற்றம் சொல்ல விரும்ப வில்லை. நான் அடைந்த இலக்கு சரியானதுதான் ஆனால் நான் ஆசைப்பட்டது இல்லை, இருந்தாலும் எனக்கு பிடித்ததை போல் நான் பயணித்துக்கொண்டிருகின்ற என் பாதை, பயணம், இலக்கு இவற்றை எல்லாம் மாற்றி அமைத்துக்கொண்டு பயணம் (மணி ஏழு, அலாரம் அடிக்க கணவு கலைந்தது, அலாரத்தை ஆப் செய்துட்டு விறு விறு என்று ஆபீஸ்க்கு கிளம்பி சென்றேன்.) தொடந்துக்கொண்டிருக்கின்றது.

நான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரிக்குள் நுழையும் போது அறிவியல்,கணினி, பொறியாளர், மருத்துவர் என்ற படிப்பு மட்டும் தான் தெரியும். ஆனால் அதையெல்லாம் தாண்டி பல படிப்புகள், வேலைகள் இருக்கின்றன என்று இப்பொழுது தான் உணர்ந்தேன். நம்மில் பலபேர் கல்லூரி படிப்பை முடித்தபின் தான், தான் என்னவாக ஆக வேண்டும், தன்னுடைய இலக்கு எது என்று முடிவு எடுக்கிறார்கள். சிலர் அதையும் எடுப்பதில்லை கால் போன போக்கில் தன் வாழ்கையை பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் . ஒருவன் தன் இலைக்கை பள்ளி பருவத்திலேயே தேர்ந்தெடுக்க வேண்டும், அந்த இலக்கை அடைய எல்லா வழிகளையும் ஆராய வேண்டும், பின் தகுந்த பாதையை (கல்லூரி படிப்பு) தேர்ந்தேடுத்து அதில் பயணம் செய்ய வேண்டும். இலக்கு பெரியதாக இருக்கட்டும், பாதை தூரமாக இருக்கும், கடின உழைப்பும், இலக்கை அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் இலக்கை அடைந்துவிடலாம் .

முதலாளியாக ஆகா வேண்டும் என்றால்

முதலில் தொழிலாளியாக இருக்க வேண்டும்!!!

No comments:

Post a Comment