Wednesday, February 8, 2012

பன்முக பண்பாடு


         

 பண்பாடுகளில் தலைமையாய் விளங்குவது தமிழனின் பண்பாடே ஆகும். ஆனால் நாம் இன்றும் பண்டைய பண்பாடுகளி பின்பற்றி வருகிறோமா ?  என்றால் இல்லை என்ற பதில் தான் நாம் அனைவரிடமும் இருந்து வரும். ஏனென்றால் நாம் நம் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துக்கொண்டோம். பிற நாடுகளின் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

 வெளி நாடுகளில் இருந்து பல கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவை நம் கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக இருந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது, ஆனால் அப்படி சில சீர்கேடுகளை உண்டாக்கும் பண்பாட்டை நாம் ஆதரித்து பின்பற்றி வருகின்றோம் இது முற்றிலும் தவறானது. நம் நாட்டின் பண்பாட்டை கண்டு வியந்து அதை பின்பற்றும் பிற நாடுகள் இன்றும் இருக்கின்றன, நாம் நம் பண்டைய பண்பாட்டை பின்பற்ற முன் வருவது இல்லை.


 வேப்பங்குட்சி, ஆலங்குட்சியில் பல் துலக்கிய நாம் இன்று துலக்கும் தூரிகையை கொண்டு துலக்குகிறோம், இதை கலாச்சார சீர்கேடு என்று சொல்ல முடியாது ஆனால் நாம் நம் கலாச்சாரத்தை மறந்துவிட்டோம் என்று ஆணித்தனமாக கூறலாம். அதற்காக தூரிகையை கொண்டு பல் துலக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை பன்முக பண்பாட்டை ஆதரியுங்கள் அதேபோல் நம் பண்பாட்டை மதியுங்கள்.

 இன்றைய தொழில்நுட்ப நிறுவணங்களில் ஆடை அணியும் முறை மிகவும் கீழ்தனமாகவும், கேவலமாகவும் இருக்கின்றது இதில் பெண்களே முக்கிய இடத்தை பிடிக்கிறார்கள். நம் நாட்டில் இருக்கும் வெளி நாட்டு நிறுவணங்களாக இருந்தாலும், நம் நாட்டு நிறுவணங்களாக இருந்தாலும் இதை கவனத்தில் கொண்டு ஒழுங்கு முறையான ஆடைகளை அணியும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

 "பிறன் மனை நோக்காதே", என்று வள்ளுவன் பாடிச்சென்றான். ஆனால் நாம் இன்று அதற்கு மாறாக உள்ளோம். நம் நாட்டில் தற்போது சிறந்து விளங்கும் விஷயமாக இருப்பது "கள்ளக்காதல்". ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு, மற்ற நாடுகளில் அப்படி இல்லை. இந்நிலையில் இவ்வாறு நாம் நடந்துக்கொள்வது நம் கலாச்சாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது.


 இது போன்று உணவு, உடை, மொழி, விருந்தோம்பல், இன்னும் பல விஷயங்களில் நாம் நம் பண்பாட்டை பாடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். பிற நாட்டு பண்பாடுகளை ஏற்று பின்பற்றுங்கள் ஆனால் அவை நம் பண்பாட்டை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் பண்பாட்டை அழித்து விடாமல் பின்வரும் சந்ததிகள் அதை அறிந்து அவற்றை பின்பற்றுமாறு நாம் அவர்களை வழி நடத்த வேண்டும், அதற்க்கு முதலில் நாம் அவற்றை பின்பற்ற வேண்டும்.

 இன்று முதல் நாம் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் " நாம் நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, நாகரிகத்தை சீர்குலைக்காமல் பாதுகாத்து பின்பற்றி அடுத்த தலைமுறையினரை அதன் வழியில் வழி நடத்தி நம் பண்பாட்டை தழைத்தோங்க செய்வோம்".

1 comment:

  1. Muyarchi thiruvinai agum..........muyarchippom mudiyum varai..........

    ReplyDelete