Wednesday, February 1, 2012

யார் இவன் ?

கட்டிடமாக நான் இருந்தால்
அதை தாங்கும் அடித்தளம் இவன்.

கடலாக நான் இருந்தால்
அதன் அழகிய அலைகள் இவன்.

கண்ணாடியாக நான் இருந்தால்
அதன் பிரதிபளிப்பு இவன்.

புத்தகமாக நான் இருந்தால்
அதன் பக்கங்கள் இவன்.

மின்விளக்காக நான் இருந்தால்
அதன் இழை இவன்.

தேன்கூடாக நான் இருந்தால்
அதை உருவாக்கும் தேனீ இவன்.

ரோஜாவாக நான் இருந்தால்
அதை காக்கும் முள் இவன்.

ஆலமரமாக நான் இருந்தால்
அதன் ஆணி வேர் இவன்.

இசையாக நான் இருந்தால்
அதை இனிமையாகும் சுவரங்கள் இவன்.

இரவாக நான் இருந்தால்
அதை குளிர்விக்கும் நிலவு இவன்.

பகலாக நான் இருந்தால்
அதை ஒளிர்விக்கும் சூரியன் இவன்.

யார் இவன் ?

யாராக இருப்பான் ?

என் உயிர் ?

இல்லை

அதற்கும் மேலானவன்

நான் என்று சொன்னால் என்னுள் அடங்குபவன்

என் நண்பன்...


2 comments: