வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.
ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநேயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர்.
நாம் செங்கற்களைச் செய்து. நெருப்பில் அவற்றைச் சுடுவோம். "அது பலமுடையதாகும்" என்றர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களை பயன்படுத்தி வீடு கட்டீனர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.
மேலும் ஐனங்கள், "நமக்காக நாம் ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எ ங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்" என்றனர்.
கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார்.
கர்த்தர், "இந்த ஐனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டு மானாலும் செய்யமுடியும் .
எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள்" என்று சொன்னார்.
அவ்வாறே கர்த்தர் ஐனங்களைப் பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று.
உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச்செய்தார்.
இவை இணையதளத்தில் இருந்து தொகுக்கப்பட்ட "தி டவர் ஆப் பாபேல் " கதை சுருக்கமாகும்.
Thanks for ur useful information...........
ReplyDelete