பத்து திங்கள் கருவறையில்
இருந்தேன்
ஒரு திங்கள் வகுப்பறையில் இருந்ததில்லை...
பள்ளிக்கு போக பணம் இல்லை
பட்டறைக்கு போக மனம் இல்லை
பூக்கள் சிந்தியது தேன்துளி
நாங்கள் சிந்தியது வியர்வைத்துளி...
பட்டாம்பூச்சியாக பள்ளிக்குள் அவர்கள்
தீகுட்சிகலாக தீபெட்டிக்குள் நாங்கள்...
திரட்டுகளாக புத்தகங்கள் நிறைந்தது நூலகம்
தீராத துன்பங்கள் நிறைந்தது எங்கள் வாழ்க்கை...
இந்தியாவின் எதிர்காலமோ நாங்கள்
எங்களின் எதிர்காலமோ கேள்விக்குறி...
நாங்கள் குழந்தை தொழிலாளர்கள்
பெயர் வைத்ததும், உருவாக்கியதும்
நாங்கள் பிறந்த தாய் நாடு.......
பெயர் வைத்ததும், உருவாக்கியதும்
நாங்கள் பிறந்த தாய் நாடு.......
itharku eppoluthu oru mudivu varum..............
ReplyDelete